லோக்சபாவில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை எழுப்பிய அனுராக் தாக்கூர்: திமுக எதிர்ப்பு
லோக்சபாவில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை எழுப்பிய அனுராக் தாக்கூர்: திமுக எதிர்ப்பு
ADDED : டிச 12, 2025 04:10 PM

புதுடில்லி: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாஜ எம்பி அனுராக் தாக்கூர் லோக்சபாவில் பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
லோக்சபாவில் பாஜ எம்பி அனுராக் தாக்கூர் பேசியதாவது: முக்கியமான விஷயத்தை எழுப்ப விரும்புகிறேன். இந்தியாவில் ஒரு மாநிலம் சனாதன தர்மத்துக்கு எதிரான மாநிலமாக மாறி வருகிறது. அம்மாநில அமைச்சர்கள் சனாதன தர்மத்துக்கு எதிராக அறிக்கை வெளியிடுகின்றனர். ஹிந்து பக்தர்கள் கோயில் செல்வதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது.
தமிழக அரசை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதுடன், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை வேண்டும் என்றே அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளது. ஹிந்துக்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. ஹிந்துக்களை தடுப்பது ஏன் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் அவையின் நடுவே வந்து கோஷம் போட்டனர். இதனையடுத்து லோக்சபா சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

