'ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்'
'ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்'
ADDED : ஜன 03, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராம்நகர் : ''அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில், திறப்பு விழாவுக்கு, யார் வேண்டுமானாலும் வரலாம்,'' என, மத்திய கனரக தொழிற்துறை இணை அமைச்சர் கிருஷ்ண பால் குர்ஜர் தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று அவர் கூறியதாவது:
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது.
அயோத்தியில் கட்டியுள்ள ராமர் கோவில், நாட்டின் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இதன் திறப்பு விழாவுக்கு, யாரையும் தனியாக அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் வரலாம்.
லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரல் தொகுதி வேட்பாளர் யார் என்பதை, கட்சி மேலிடம் முடிவு செய்யும். சீட் அறிவிக்கும் வரை, மோடியே வேட்பாளர். அவருக்காக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.