ADDED : ஜன 27, 2024 01:55 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜ., நியமித்துள்ளது. தமிழகத்திற்கு அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.,வும் அதற்கான முன்னெடுப்பை எடுத்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொறுப்பாளர்கள் மற்றும் துணை பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி தமிழக பொறுப்பாளர்களாக அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளனர்.
உ.பி., மாநில பொறுப்பாளராக பைஜெயந்த் பண்டாவும், பீஹார் மாநில பொறுப்பாளராக வினோத் தாவ்தேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

