ஏப். 06-ம் தேதி காங்., தேர்தல் அறிக்கை வெளியிட முடிவு
ஏப். 06-ம் தேதி காங்., தேர்தல் அறிக்கை வெளியிட முடிவு
ADDED : மார் 28, 2024 10:13 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள காங்., கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஏப். 06-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்லிமென்ட் லோக்சபா தேர்தல் தேர்தலை ஏழு கட்டங்களாக அறிவித்து தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தேசிய கட்சியான காங்., இண்டியா கூட்டணியில் உள்ளது. இக்கட்சி இதுவரை பல்வேறு கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.இக்குழு தனது அறிக்கையை இம்மாதம் முதல் வராத்தில் கட்சி மேலிடத்தில் அளித்தது.
இவ்வறிக்கையில், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறு-குறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என 25 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராஜஸ்தான் மாநில காங்.., தலைவர் கோவிந்த் சிங் டோட்டாசாரா கூறியது, தேர்தல் அறிக்கைக்கு கட்சி மேலிடம் பரிசீலித்துள்ளது. வரும் ஏப். 06-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்றார்.