ADDED : ஜூலை 31, 2011 10:54 PM
புதுடில்லி:நெடுஞ்சாலை பணிக்காக, அடுத்த ஐந்தாண்டில், 2.64 லட்சம் கோடி
ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய தரைவழி
போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி.ஜோஷி இது குறித்து
கூறியதாவது:'நம்நாட்டில், போதிய அளவுக்கு நெடுஞ்சாலைகள் இல்லை' என, பிரதமர்
மன்மோகன் சிங் வருத்தப்பட்டார்.
இதை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை
எடுக்கும்படி அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, அடுத்த ஐந்தாண்டு
திட்டத்தில், இதற்காக, 2.64 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதில்,
தேசிய நெடுஞ்சாலைத் துறை, 87 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
மீதமுள்ள, 1.77 லட்சம் கோடி ரூபாய் தனியார் மூலம் முதலீடு
செய்யப்படும்.நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்குரிய செயல்திட்டம் ஏற்கனவே
துவங்கி விட்டது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 1,042 கிலோ மீட்டர்
நீளத்துக்கு நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. நான்கு நெடுஞ்சாலை
திட்டத்துக்காக, கடந்த மாதம் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை, 9,500 கோடி
ரூபாய் செலவிட்டுள்ளது.இவ்வாறு சி.பி.ஜோஷி கூறினார்.