வெளிநாட்டில் படிக்க போகிறீர்களா ? 2000+ பல்கலைக்கழக முழுவிவரம் இதோ !
வெளிநாட்டில் படிக்க போகிறீர்களா ? 2000+ பல்கலைக்கழக முழுவிவரம் இதோ !
UPDATED : மே 05, 2025 07:59 AM
ADDED : மே 04, 2025 12:51 AM

உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றும் மனிதனில் அத்தியாவசிய தேவைகள். இவை மூன்றையும் பெற கல்வி மிக முக்கியம். கல்வி இருந்தால் இவை மூன்றையும் எளிதில் பெற முடியும்.
என்னதான் நம் நாட்டில் கல்வி கற்க ஏராளமான வசதி, வாய்ப்பு இருந்தாலும், சிலருக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும் அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் அல்லது ஊரில் கிடைப்பதில்லை. அதனால் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் விரும்புகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்; இருப்பினும் ஒரு சிலர் வெளிநாட்டில் படித்தோம் என்று பெருமைப்பட்டு கொள்வதற்காக வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை நாடுகின்றனர்.
அடுக்கடுக்கான கேள்விகள்
எது எப்படி இருப்பினும் எந்த நாட்டில் எந்த பல்கலைக்கழகத்தில் என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன? அதற்கான செலவு எவ்வளவு? அந்த பல்கலைக்கழகங்களின் இணையதள முகவரி என்ன? அந்த நாட்டிற்கு படிக்கச் செல்வதற்கான விசா அனுமதியை எப்படி பெறுவது? அந்த விசா எந்த அளவுக்குப் பயன்படும்? அந்த விசா மூலம் படித்துக் கொண்டே அந்த நாட்டில் வேலை செய்ய வாய்ப்பு இருக்கிறதா' படிப்பிற்கான விசா காலத்தை நீட்டித்துக் கொள்ள முடியுமா? விசா பெறுவதற்கான ஆவணங்கள் என்னென்ன ? பல்கலை.,யில் என்ன என்ன பாடங்கள் உள்ளது ?படிப்பை முடித்தபிறகு அந்த நாட்டில் வேலை தேட விரும்பினால் அதற்கு என்ன செய்வது?
![]() |
இது போன்ற சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு எழுவது இயற்கையே.மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரின் சந்தேகங்களைப் போக்கும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன பல்கலைக்கழகங்கள், இது தொடர்பான அனைத்து தகவல்களும் நமது இணைய தளபக்கத்தில் விலாவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இணையதள முகவரி கீழே தரப்பட்டுள்ளது. அனைவரும் இதைப்படித்து பயன்பெற விரும்புகிறோம்.