ரயில் விபத்துக்களை தடுக்கும் ‛கவச் ' தொழில்நுட்பம்: வைஷ்ணவ் உறுதி
ரயில் விபத்துக்களை தடுக்கும் ‛கவச் ' தொழில்நுட்பம்: வைஷ்ணவ் உறுதி
ADDED : செப் 26, 2024 02:29 AM

புதுடில்லி: 2030-க்குள் ரயில் விபத்துக்களை தடுக்கும் ‛‛கவச்'' தொழில்நுட்பம் நாடு முழுதும் செயல்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துக்களால் ரயில் பயணத்தின் பாதுகாப்பை, நுாறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், 'கவச்' என்ற தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தி வருகிறது,
இந்நிலையில், ‛ கவச்' தொழில்நுட்பத்தின் கீழ் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்திற்குபட்ட , ராஸ்தானில் சவாய் மதுபூர் -இந்திரகார்க் இடையே ரயில் பாதையில் பரிசோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
இதனை மத்திய ரயில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் துவக்கி வைத்து ரயிலில் பயணம் செய்து ஆய்வு செய்தார். இந்த பரிசோதனை முறை வெற்றிகரமாக செயல்பட்டதாக அஷ்வினி வைஷ்ணவ் ‛எக்ஸ்' வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 2030 டிசம்பருக்குள் ‛கவச்' தொழில்நுட்பம் நாடு முழுதும் செயல்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
‛கவச் ' செயல்படுவது எப்படி?
ரயில் இன்ஜின், ரயில் பாதை, சிக்னல் என மூன்றையும் இணைத்து உருவாக்கப்பட்டது தான் 'கவச்' தொழில்நுட்பம்.அதன்படி, ரயில் இன்ஜின் பகுதியில், சிறிய கருவி பொருத்தப்படும். ரயில் ஓடும் பாதையில் ஏதாவது தடை ஏற்பட்டிருந்தால், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும். அதையும் மீறி, ஓட்டுனர் செயல்பட்டாலும், தடை ஏற்பட்டிருந்த பகுதிக்கு 50 மீ. முன்பாக, ரயில் தானாக நின்று விடும்.
இதன் மூலம் கவச் தொழில்நுட்பம், இன்ஜின் வேகத்தை கட்டுப்படுத்தவும், நிறுத்தவும் கூடியது.