பூர்வக்குடி மக்களின் பாதுகாப்புக்கு ஆயுத உரிமம்: அசாம் முடிவு
பூர்வக்குடி மக்களின் பாதுகாப்புக்கு ஆயுத உரிமம்: அசாம் முடிவு
ADDED : ஆக 07, 2025 12:42 AM

குவஹாத்தி: அசாமில் பதற்றமான பகுதிகளில் வசிக்கும் பூர்வக்குடி மக்கள், தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான உரிமத்தை பெற பிரத்யேக தளம் உருவாக்கப்படும் என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ஜ., முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியதாவது:
அசாமின் பூர்வக்குடி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகங்கள் அளித்த தகவலின்படி துப்ரி, மோரிகான், பார்பெட்டா, நாகவுன் ரூபாஹி, திங், ஜானியா உள்ளிட்ட பகுதிகள் பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்காப்பு பயன் பாட்டிற்கு ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமத்தை பெற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், தங்களின் ஆவணங்களை சமர்பித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.