பயிற்சி முடித்த வீரர்களுடன் தண்டால் எடுத்த ராணுவ தளபதி உபேந்திர திவேதி; வீடியோ வைரல்
பயிற்சி முடித்த வீரர்களுடன் தண்டால் எடுத்த ராணுவ தளபதி உபேந்திர திவேதி; வீடியோ வைரல்
ADDED : டிச 13, 2025 08:48 PM

டேராடூன்: ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்களுடன் ராணுவ தளபதி உபேந்திர திவேதி தண்டால் எடுத்து தனது உடற்பயிற்சி திறன்களை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்த வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டார்.
அப்போது ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்களுடன் ராணுவ தளபதி உபேந்திர திவேதி தண்டால் எடுத்து தனது உடற்பயிற்சி திறன்களை வெளிப்படுத்தினார். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இளம் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. ராணுவ தளபதி தண்டால் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நற்பெயர்!
பயிற்சி முடித்த வீரர்கள் மத்தியில், ராணுவ தளபதி உபேந்திர திவேதி பேசுகையில், 'திறமையான அதிகாரிகளையும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களையும் உருவாக்குவதில் இந்திய ராணுவ அகாடமி நற்பெயரை பெற்றுள்ளது' என தெரிவித்தார்.

