ADDED : ஜன 10, 2025 07:26 AM

பெங்களூரு: பெங்களூரு மானக் ஷா மைதானத்தில் நாளை ராணுவ மேளா நடக்கிறது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
ராணுவ துறை சார்பில், பெங்களூரு மானக் ஷா மைதானத்தில் நாளை ராணுவ மேளா நடக்கிறது. காலை 8:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை நடக்கும் மேளாவை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைக்கிறார்.
இந்த மேளாவை கண்டு ரசிக்க அனைவருக்கும் அனுமதி இலவசம். இந்த மேளாவின் மூலம், ராணுவ வீரர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
அவர்களின் வாழ்க்கையை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக மேளா அமையும்.
ராணுவ உபகரணங்களை மிக நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பும் சாத்தியமாகும். பாரா மோட்டார் கிளைடிங், மோட்டார் சைக்கிள் சாகசம், ராணுவ வாகனங்களை ஓட்டுவது போன்ற அற்புதமான காட்சிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
மேலும் ராணுவம் குறித்த தகவல்களை வழங்கும் ஸ்டால்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 9:00 மணிக்கு ஒத்திகை நடக்கிறது.

