தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் அத்துமீறிய டிரோன்களை விரட்டி அடித்த ராணுவம்

காஷ்மீரில் அத்துமீறிய டிரோன்களை விரட்டி அடித்த ராணுவம்

காஷ்மீரில் அத்துமீறிய டிரோன்களை விரட்டி அடித்த ராணுவம்


ADDED : ஜன 13, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் இன்றும்(ஜனவரி 13) சில டிரோன்கள் ஊடுருவியதாக தெரியவந்துள்ளது. அதன் மீது நமது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர்.

கடந்த 11ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சம்பா, ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பட்டு பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமானவகையில் டிரோன் நடமாட்டம் இருந்தது. இதனை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். இந்த டிரோன்கள் பாகிஸ்தான் தரப்பில் இருந்து நுழைந்துஇந்திய எல்லையில் சிறிது ே நரம் நோட்டமிட்டு பின்னர் எல்லை தாண்டி திரும்பிச் சென்றது. இதனையடுத்து இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று (ஜனவரி 13) கூறுகையில், பாகிஸ்தானின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானிடம் இதனை தெரிவித்துவிட்டோம். பாகிஸ்தானின் இத்தகைய செயலை எதிர்கொண்டு பதில் கொடுக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது எனத்தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இரண்டு டிரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக தகவல் வெளியாகிஉள்ளது. இதனை பார்த்ததும், இந்திய ராணுவத்தினர் அதன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர்.

துங்கலா - நாப்லா பகுதியில் பல டுரோன்கள் ஊடுருவியதாகவும் , அதன் மீது இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us