பஞ்சாபில் அடுத்த ஆண்டு மின்வெட்டு இருக்காது அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
பஞ்சாபில் அடுத்த ஆண்டு மின்வெட்டு இருக்காது அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
ADDED : அக் 09, 2025 03:09 AM

ஜலந்தர்:“அடுத்த ஆண்டு முதல் பஞ்சாபில் மின்வெட்டு இருக்காது,”என, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், துணை மின்நிலையத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டி, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் மின்சாரத் துறையில் மிகப்பெரிய அளவில் மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு கோடை கோலத்தில் பஞ்சாபில் மின்வெட்டு இருக்காது.
பஞ்சாபில் 90 சதவீத மக்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது. அதேபோல, விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரம் தடையில்லா மின்சாரம் பெறுகின்றனர். விரைவில் நாள் முழுதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். மாநிலம் முழுதும் தடையின்றி 24 மணி நேரமும் மின் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உள்கட்டமைப்பில், 25,000 கி.மீ., தூரத்துக்கு புதிய மின் ஒயர்கள், 8,000 புதிய டிரான்பார்மர்கள் மற்றும் 77 புதிய மின் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் பகவந்த் மான், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.