sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜப்பான், பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை: இந்தியாவிற்கான வாய்ப்பு அதிகரிப்பு

/

ஜப்பான், பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை: இந்தியாவிற்கான வாய்ப்பு அதிகரிப்பு

ஜப்பான், பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை: இந்தியாவிற்கான வாய்ப்பு அதிகரிப்பு

ஜப்பான், பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை: இந்தியாவிற்கான வாய்ப்பு அதிகரிப்பு

6


UPDATED : பிப் 17, 2024 05:35 PM

ADDED : பிப் 17, 2024 05:24 PM

Google News

UPDATED : பிப் 17, 2024 05:35 PM ADDED : பிப் 17, 2024 05:24 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வல்லரசு நாடுகளான ஜப்பான் மற்றும் பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு உள்ள நிலையில், இந்தியாவிற்கான வாய்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்து உள்ளது.

கோவிட் காரணமாக ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாக உலகின் பெரும் வல்லரசு நாடுகளான பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மந்த நிலையை எதிர்கொண்டு உள்ளன. இதனால், விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அந்நாடுகள் எதிர்கொண்டு வருகிறது.

ஜப்பான்


ஒரு காலத்தில் உலகின் பெரிய பொருளாதாரமாக விளங்கிய ஜப்பான் தற்போது கோவிட் பெருந்தொற்றில் இருந்து மீள்வதில் திண்டாடி வருகிறது. நிதி பிரச்னை ஏற்பட, உலகின் பெரிய 3வது பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை ஜெர்மனியிடம் பறி கொடுத்து 4வது இடத்திற்கு ஜப்பான் தள்ளப்பட்டு உள்ளது.

ஜெர்மனி


உலகின் 3வது பெரிய பொருளாதார நாடு. ஐரோப்பாவின் முக்கிய நாடு என்றளவில் ஜெர்மனி இருந்தாலும், ஏற்றுமதி மற்றும் அதனை சார்ந்த உற்பத்தி பிரச்னைகளை எதிர் கொண்டு வருகிறது. மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் உயர்ந்துள்ள எரிபொருள்களின் விலையும் அந்நாட்டை திணறடித்து வருகிறது.

இதுபோதாது என்று ஐரோப்பிய மத்திய வங்கி அறிவித்த வட்டி விகித உயர்வு, அந்நாட்டின் பட்ஜெட் நிச்சயமற்ற சூழ்நிலை, திறன்வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் ஜெர்மனியின் பொருளாதாரமும் சிக்கலை சந்தித்து வருகிறது.

இந்தியா


இது போன்ற காரணங்களினால், தற்போது உலக நாடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனம் இந்தியா மீது திரும்பி உள்ளது. முதலீட்டாளர்கள் இந்தியாவை மிகவும் நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.

ச்ரவதேச நிதியத்தின் கணிப்பின்படி, பொருளாதார வளர்ச்சியில் இந்தியா ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முறையே 2026 மற்றும் 2027 ல் முந்திவிடும் என கணித்து உள்ளது.

உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் வளர்ச்சி தொடர்பான அறிக்கையின்படி 6.2 சதவீத வளர்ச்சியுடன் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. தற்போது, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு அடுத்து உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

2023 ம் ஆண்டின் நிலவரப்படி அமெரிக்காவின் ஜிடிபி 27.94 டிரில்லியன் டாலர் ஆகவும், சீனாவின் ஜிடிபி 17.5 டிரில்லியன் டாலர் ஆகவும் உள்ளது. இந்தியாவின் ஜிடிபி 3.7 டிரில்லியன் டாலர் ஆக உள்ளது.

உற்பத்தி மையமாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதுவதால் இந்தியா பலனடைந்து வருகிறது. வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் இடையிலான இடைவெளி சுருங்கி வருகிறது. தற்போதைய நிலையில், சர்வதேச பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்ற இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மாறி வரும் காலகட்டத்தில் இந்தியா தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கும், வரவிருக்கும் ஆண்டுகளில் உலகளாவிய வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us