சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக சக்ரா'; சோபியாவுக்கு 'விஷிஸ்ட் சேவா' விருது
சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக சக்ரா'; சோபியாவுக்கு 'விஷிஸ்ட் சேவா' விருது
UPDATED : ஜன 26, 2026 11:24 AM
ADDED : ஜன 26, 2026 02:03 AM

புதுடில்லி: நம் விமானப்படையின் குரூப் கேப்டனும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தவருமான சுபான்ஷு சுக்லாவுக்கு வீர தீர செயலுக்கான 'அசோக சக்ரா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுபான்ஷு சுக்லா, 41, நம் விமான படையில் குரூப் கேப்டன் அந்தஸ்தில் உள்ள வீரர். இவர் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூனில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுடன் இணைந்து, இஸ்ரோ ஒத்துழைப்புடன் அனுப்பப்பட்ட 'ஆக்சியம் 4' விண்வெளி பயண திட்டத்தில் பைலட்டாக பங்கேற்றார். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று 18 நாட்கள் தங்கி சுமார் 60-க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகளை நடத்தினார்.
இந்நிலையில், நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு முப்படைகளைச் சேர்ந்த 70 வீரர்களுக்கு வீர தீர விருதுகளை அறிவித்தார். அதில் சுபான்ஷு சுக்லாவுக்கு உயரிய அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை குறித்து விளக்கிய ராணுவ பெண் அதிகாரி சோபியா குரேஷிக்கு 'விஷிஸ்ட் சேவா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

