சட்டசபையில் நேற்றும் பெரும்பாலான இருக்கைகள், காலியாகவே இருந்தன. விரல்விட்டு எண்ண கூடிய அளவில், உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்
l காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரிசைக்குச் சென்று, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் நீண்ட நேரமாக ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்
l பா.ஜ., உறுப்பினர் அஸ்வத் நாராயணா, ஆளுங்கட்சி இருக்கைக்குச் சென்று, அமைச்சர்கள் தினேஷ் குண்டுராவ், சிவானந்தா பாட்டீலிடம் வெகுநேரமாக சிரித்துப் பேசினார்
l மூத்த வக்கீல் பாலி நாரிமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பா.ஜ., உறுப்பினர் பசவராஜ் பொம்மை பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அமைச்சர் சிவராஜ் தங்கடகி, காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டே இருந்தார். அமைதியாக இருக்கும்படி, சிவராஜ் தங்கடகியிடம், சபாநாயகர் காதர் கூறினார்
l உறுப்பினர்களுக்கு, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி நேற்று மதிய விருந்து வைத்தார். இதுகுறித்து சட்டசபையில் கூறிய சபாநாயகர் காதர், “மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, உறுப்பினர்கள் அவைக்கு வர வேண்டும். யாரும் வீட்டிற்கு சென்றுவிட வேண்டாம்,” என கூறியதால், சிரிப்பலை எழுந்தது.