அருணாச்சல், சிக்கிமில் சட்டசபை தேர்தல்: ரிசல்ட் தேதி மாற்றம்
அருணாச்சல், சிக்கிமில் சட்டசபை தேர்தல்: ரிசல்ட் தேதி மாற்றம்
UPDATED : மார் 17, 2024 04:07 PM
ADDED : மார் 17, 2024 04:04 PM

புதுடில்லி: அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கும் ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் செய்து இந்திய தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இம்மாநிலங்களில் லோக்சபா தேர்தலுக்கான எண்ணிக்கை ஜூன் 4ல் தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் ஜூனில் முடிவடைகிறது. இந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் வெளியிட்டார். ஆந்திராவில், மே 13, அருணாச்சலில், ஏப்., 19 தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும், ஜூன், 4ம் தேதி இந்த நான்கு மாநில சட்டசபைகளுக்கும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கும் ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் செய்து இந்திய தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
2 மாநிலங்களிலும் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தேதியில் மாற்றமில்லை. அருணாச்சல், சிக்கிம் ஆகிய 2 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் ஜூன் 2ம் தேதியே முடிவடைவதால் ஓட்டு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

