ADDED : செப் 21, 2024 05:06 PM

புதுடில்லி: டில்லி முதல்வராக அதிஷி பதவியேற்று கொண்டார். அவருக்கு துணை நிலை கவர்னர் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் கிடைத்தும், முதல்வர் அலுவலகம் செல்ல முடியாத விரக்தியில் கெஜ்ரிவால் பதவி விலகினார். தொடர்ந்து நடந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அதிஷி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் டில்லி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இன்று டில்லியில் கவர்னர் இல்லத்தில் நடந்த விழாவில் அதிஷி முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருக்கு சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் கோபால் ராய், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
டில்லியில், பா.ஜ.,வின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீக்சித்தை தொடர்ந்து 3வது பெண் முதல்வர் என்ற பெருமை அதிஷிக்கு கிடைத்துள்ளது. மேலும் டில்லியின் 8 வது முதல்வர் இவர் ஆவார்.