ADDED : நவ 29, 2024 01:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி :
ஆன்லைன் வாயிலாக நடந்த பணமோசடி தொடர்பாக டில்லியில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியின் கபஷேரா பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். பி.ஒய்.ஒய்.பி.எல்., என்ற செயலியை நடத்துவோருக்கு எதிராக தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை அசோக் சர்மா என்பவர் மற்றும் அவரது சகோதரர் உட்பட ஐந்து பேர் தாக்கினர். இதில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.