ADDED : அக் 11, 2025 12:49 AM

கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கக்கவச விவகாரத்தை திசை திருப்பவே, நடிகர்களை மாநில அரசு குறிவைத்துள்ளது. அரசு, குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் போதெல்லாம், போலீஸ் மூலம் பிரபலங்களை களங்கப்படுத்தும் போக்கு தொடர்கிறது. இது போன்ற சம்பவங்கள் தொடரும்.
சுரேஷ் கோபி, மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
அரை சதமடித்த டிரம்ப்!
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 50 முறை கூறி அரை சதம் அடித்து விட்டார். அவர் சதமடிக்க நீண்ட நாள் ஆகாது. இந்த விவகாரத்தில் டிரம்ப் விடாப்பிடியாக இருக்கிறார். பிரிட்டன் பிரதமர் ஸ்டாமருடனான சந்திப்பிலும், பிரதமர் மோடி டிரம்பையே புகழ்ந்து பேசினார்.
ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்.,
பொறுப்பற்ற மம்தா பானர்ஜி!
வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திருத்தப்பணி நடந்தால் கலவரம் நடக்கும் என, மிரட்டல் தொனியில் அவர் பேசியிருக்கிறார். இப்படி பொறுப்பற்ற முறையில் பேசும் அவரை, சட்டசபை தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
சம்பித் பாத்ரா லோக்சபா எம்.பி., - பா.ஜ.,