நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகரில் ஏற்கனவே உள்ள 37 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மூன்றாம் தரப்பு தணிக்கை செய்து, அவற்றின் நிலவரம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க குடிநீர் வாரியத்துக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது. 18 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் திறன் மேம்படுத்த திட்டம் உள்ளது. சோனியா விஹார், டில்லி கேட் ஆகிய இரண்டு இடங்களில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யமுனையில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பாய்கிறது. இதைக் குறைக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தணிக்கை. தணிக்கை அறிக்கைகளின் அடிப்படையில், கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த கூடுதல் வழிமுறைகள் வழங்கப்படும்.
பர்வேஷ் சாஹிப் சிங்
மாநில அமைச்சர்
பொதுப்பணித்துறை

