ADDED : மார் 06, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தர்பூர், மத்திய பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டத்தின் ஈஷா நகரைச் சேர்ந்தவர் மகேந்திர குப்தா. இவர், கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜாவர் தொகுதியில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்டு, 10,400 ஓட்டுகளுடன் மூன்றாவது இடம் பெற்று தோல்வியை தழுவினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சத்தர்பூரில் நடந்த திருமண நிகழ்வில் இவர் பங்கேற்க சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், மகேந்திர குப்தாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.
இதில் படுகாயம் அடைந்த மகேந்திர குப்தா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

