அதிபருக்கு எதிராக மீண்டும் போராட்டம்: பாதுகாப்பு பணியில் 17,000 பேர்
அதிபருக்கு எதிராக மீண்டும் போராட்டம்: பாதுகாப்பு பணியில் 17,000 பேர்
ADDED : டிச 02, 2025 12:53 AM

மணிலா: தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மீண்டும் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
அரசுத் துறைகளில் ஊழல் செய்யும் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குவதுடன், அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்தது. தலைநகர் மணிலாவில், வீதியில் இறங்கி ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த செப்டம்பரில், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிபர் மார்க்கோஸ் ஜூனியரின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கனமழையால் பெரும் பாதிப்பை மக்கள் சந்தித்தனர். இதையடுத்து, ஆட்சிக்கு எதிராக மக்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் முன்னெடுத்து உள்ளனர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிடுவதை தடுக்கும் வகையில் தலைநகரில் 17,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

