ADDED : அக் 29, 2024 07:55 AM
காடுகோடி: பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரின், காடுகோடியில் வங்கதேச நபர், சட்டவிரோதமாக வசிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை, அங்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். முகமது ரம்ஜான், 37, என்பவரை கைது செய்தனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த இவர், தன் மனைவியை விட்டு விலகி, மருத்துவ விசாவில் இந்தியாவுக்கு வந்தார். மற்றொரு திருமணம் செய்து கொண்டு, பெங்களூரில் வசித்து வந்தார். குப்பை அள்ளும் வேலை செய்து வந்தார். 2023ல் குற்ற வழக்கில் மஹாதேவபுரா போலீசாரால் கைதாகி விடுதலையானார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என பொய் சொல்லி ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட தேவையான ஆவணங்களை பெற்றிருந்தார். ஏழு ஆண்டுகளாக இங்கு வசித்து வந்தார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர், சட்டவிரோதமாக வசிப்பதாக, வெளிநாட்டு பதிவு மையம், காடுகோடி போலீசாருக்கு தகவல் கொடுத்தது. அதன் அடிப்படையில் போலீசாரும், அவரை கைது செய்தனர்.