தட்சிண கன்னடா;
வங்கி கொள்ளை இருவர் கைது
தட்சிண கன்னடா, மங்களூரு புறநகரின், கே.சி.சாலையில் கோட்டேகார் விவசாய கூட்டுறவு வங்கி உள்ளது. ஜனவரி 17ம் தேதி மதியம், வங்கிக்குள் நுழைந்த மர்ம கும்பல், வங்கி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி, கிலோ கணக்கில் தங்கம், ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து தப்பியோடினர்.
இது தொடர்பாக, விசாரணை நடத்திய மங்களூரு போலீசார், கொள்ளையில் தொடர்பு கொண்ட முருகன், யஷுவா ராஜேந்திரன், கண்ணன் மணி, தங்கநகைகளை அடமானம் வைக்க உதவிய சண்முகம் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் கொள்ளையடித்த 18.314 கிலோ தங்க நகைகள், 3.80 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் விசாரித்ததில், கொள்ளைக்கு திட்டம் தீட்டியது பாஸ்கர் பெள்ளவாடா என்ற சசி தேவர், 69, என்பது தெரிந்தது. அவரை தேடி வந்தனர்.
பெங்களூரு ரயில் நிலையம் அருகில், நேற்று காலை அவரையும், அவரது கூட்டாளி முகமது நஜீர், 60, என்பவரையும் கைது செய்தனர்.

