ADDED : ஜூலை 22, 2025 07:27 AM

பீஹாரில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம், அரசியலமைப்புக்கு உட்பட்டே நடக்கிறது. இதை எதிர்ப்போர், அச்சட்டத்தின் அடிப்படை அறிவற்றவர்கள். இது, இந்திய வாக்காளர்களை விட, வெளிநாட்டினர் மீது அவர்களுக்கு அதிக அக்கறை உள்ளதை காட்டுகிறது. அவர்களை தேசப்பற்றுள்ளவர்கள் என அழைக்க முடியாது.
கிரிராஜ் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,
பா.ஜ., துடைத்தெறியப்படும்!
பெங்காலியை தாய்மொழியாக பேசும் மக்களை குறிவைத்து பா.ஜ.,வினர் தாக்குகின்றனர். அவர்களை, தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப திட்டமிடும் பா.ஜ.,வை, வரும் சட்டசபை தேர்தலில் நம் மாநிலத்தில் இருந்து துடைத்தெறிய வேண்டும். பெங்காலி மொழியை தாக்கி பேசும் அசாம் முதல்வர் மீது, பா.ஜ., இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அபிஷேக் பானர்ஜி தேசிய பொதுச்செயலர், திரிணமுல் காங்கிரஸ்
முஸ்லிம்கள் அஞ்ச வேண்டாம்!
ச ட்டவிரோத வாக்காளர்களை நீக்க மேற்கு வங்கத்திலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை தேர்தல் கமிஷன் நடத்த வேண்டும். இந்திய முஸ்லிம் கள், இதனால் கவலையடைய தேவையில்லை. வங்க தேசத்தின் ரோஹிங்கியா மற்றும் முஸ்லிம்கள், வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவுசெய்ய அனு மதிக்க முடியாது .
சுவேந்து அதிகாரி மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,