ADDED : ஜூலை 15, 2025 12:03 AM

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நம் வீரர் சுபான்ஷு சுக்லா நடத்திய ஆராய்ச்சிகள், நம் நாட்டுக்கு மட்டுமின்றி உலகின் பிற நாடுகளுக்கும் பயனளிக்கும். இதனால், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகளுக்கு தேவை ஏற்படும். முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உலகிற்காக பல ஆய்வுகளை செய்துள்ளார்.
ஜிதேந்திர சிங்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
பொய் வாக்குறுதி!
பீஹாரில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் நிதிஷ் குமார், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக எதுவுமே செய்யவில்லை. தற்போது சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், வேலைவாய்ப்பு தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார். இனியும் அவரை நம்ப பீஹார் மக்கள் தயாராக இல்லை.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்
ஹிந்தி கற்க தயக்கம் ஏன்?
வேலைக்காக வெளிநாட்டு மொழிகளை கற்கும் போது, நம் தேசிய மொழியான ஹிந்தியை கற்க ஏன் தயங்குகின்றனர்? அரசியலுக்கு அப்பால் தேசத்தை இணைக்கும் ஒரு கலாசார இணைப்பாக ஹிந்தி உள்ளது. தாய்மொழி எப்படி முக்கியமோ, அதே போல், நாடு முழுதும் மக்களை தொடர்பு கொள்ள ஹிந்தி அவசியம்.
பவன் கல்யாண்
ஆந்திர துணை முதல்வர், ஜனசேனா