தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ முடிந்தது மே.வங்க தேர்தல் 'ஐ - பேக்' நிறுவனருக்கு கிடைத்தது ஜாமின்

 முடிந்தது மே.வங்க தேர்தல் 'ஐ - பேக்' நிறுவனருக்கு கிடைத்தது ஜாமின்

 முடிந்தது மே.வங்க தேர்தல் 'ஐ - பேக்' நிறுவனருக்கு கிடைத்தது ஜாமின்


ADDED : மே 01, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 02:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், திரிணமுல் காங்கிரசின் தேர்தல் வியூக அமைப்பான, 'ஐ - பேக்' எனப்படும், 'இந்திய பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி'யின் இணை நிறுவனரும் இயக்குநருமான வினேஷ் சந்தேலுக்கு, பண மோசடி வழக்கில் டில்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று ஜாமின் அளித்தது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் முடிந்தது. இங்கு, ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு, 'ஐ - பேக்' நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து தருகிறது.

இதற்கிடையே, நிலக்கரி ஊழல் மூலம் பெறப்பட்ட 50 கோடி ரூபாயை, இந்நிறுவனம் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ., - அமலாக்கத்துறை என தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில், 'ஐ - பேக்' நிறுவனத்தின் இணை நிறுவனர் வினேஷ் சந்தேலை, கடந்த மாதம் 13ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, போலி ரசீதுகளை தயாரித்தது, கணக்கில் வராத நிதியை பெற்றது மற்றும் ஹவாலா மூலம் பண பரிமாற்றம் செய்தது போன்ற முறைகேடுகளில், 'ஐ - பேக்' நிறுவனம் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியது.

வினேஷ் சந்தேல் தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து அமலாக்கத் துறையினர் விசாரித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு , டில்லி பாட்டியாலா கூடுதல் அமர்வு நீதிபதி அமித் பன்சால் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வினேஷ் சந்தேல் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காததால், அவருக்கு நீதிபதி நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us