ADDED : ஜன 10, 2025 11:14 PM
பெங்களூரு: பெங்களூரு நகரம் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே வருகிறது. ஐ.டி., நிறுவனங்கள், ஹோட்டல்கள் என பல கட்டடங்கள் வந்த வண்ணமே உள்ளன. பெங்களூரு நகரில் சகல வசதிகளும் உள்ளதால், ஏராளமான தொழிலதிபர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் தொழில் சம்பந்தமாக வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் செல்வதற்கு, பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா விமான நிலையத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
இதன் காரணமாக இங்கிருந்து நாட்டில் உள்ள 11 நகரங்களுக்கு புதிதாக விமான சேவை துவங்கப்பட்டது. அத்துடன் நான்கு சர்வதேச விமான நிலையங்களுக்கும் நேரடி விமான சேவை துவக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு மட்டும் கெம்பே கவுடா விமான நிலையம் வாயிலாக 4.73 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 21 சதவீதம் அதிகம். இது ஒரு புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

