பெங்களூரு குண்டு வெடிப்பு: இருவரின் புகைப்படங்கள் வெளியீடு: தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 10 லட்சம் சன்மானம்
பெங்களூரு குண்டு வெடிப்பு: இருவரின் புகைப்படங்கள் வெளியீடு: தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 10 லட்சம் சன்மானம்
UPDATED : மார் 29, 2024 07:02 PM
ADDED : மார் 29, 2024 06:46 PM

பெங்களூரு: பெங்களூரு கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக இருவரின் புகைப்படத்தை என்.ஐ.ஏ. இன்று வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில், ‛‛ராமேஸ்வரம் கபே'' என்ற ஹோட்டலில், மார்ச் 1ல் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், ஹோட்டல் ஊழியர்கள் உட்பட, 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த முஸவீர் ஹுசைன் சாகிப், அப்துல் மாத்ரின் தாஹா ஆகியோர் தான், குண்டு வெடிப்பு குற்றவாளிகள் என்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள், குண்டு வெடிப்புக்கு முன்னரும், பின்னரும், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, தனியார் விடுதியில் தங்கி உள்ளனர்.
இதில், ஒட்டி இருந்த முடியையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சேகரித்து, தடயவியல் சோதனைக்கு அனுப்பினர். மேலும், குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தோர் மற்றும் தொடர்பில் இருந்தோர் குறித்தும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து பட்டியல் தயாரித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நேற்று முஸாமில் ஷெரீப் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் முஸவீர் ஹுசைன் சாகிப், அப்துல் மாத்ரின் தாஹா ஆகிய இருவரின் புகைப்படத்தை இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இவர்களை பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளனர்.

