பெங்களூரு - கொழும்பு விமானம் அக்., 31 முதல் இயக்கம்
பெங்களூரு - கொழும்பு விமானம் அக்., 31 முதல் இயக்கம்
ADDED : அக் 25, 2024 10:57 PM
பெங்களூரு: பெங்களூரில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு வரும் 31 முதல், இரண்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக, இலங்கை ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் இருந்து இந்தியாவின் டில்லி, பெங்களூரு, தமிழகத்தின் திருச்சி, மதுரை, மும்பை, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய ஒன்பது நகரங்களுக்கு வாரத்தில், 90 விமானங்களை, இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்நிலையில், சுற்றுலா பயணியரை கவரும் வகையில், கூடுதலாக இரண்டு விமானங்களை இயக்க இலங்கை ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் 31ம் தேதி முதல் பெங்களூரு -- கொழும்பு இடையே வாரத்தில் மூன்று நாட்கள் விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து யு.எல்., 1174 விமானம், அக்., 31ம் தேதி முதல் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் காலை 9:40 மணிக்கு புறப்பட்டு 11:10 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் யு.எல்., 1173 விமானம், கொழும்பில் இருந்து வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் காலை 7:20 மணிக்கு புறப்பட்டு 8:40 மணிக்கு பெங்களூரு வந்தடையும். இதன் வாயிலாக, பெங்களூரில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படும் விமானத்தின் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.