போக்குவரத்து நெரிசல் பட்டியலில் பெங்களூரு முன்னேற்றம்: தயானந்தா
போக்குவரத்து நெரிசல் பட்டியலில் பெங்களூரு முன்னேற்றம்: தயானந்தா
ADDED : பிப் 06, 2024 11:10 PM

பெங்களூரு, : ''உலகளவில் போக்குரவத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்தில், 2023ல் ஆறாவது இடத்தை பிடித்த பெங்களூரு, 2022ல் இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது,'' என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்தார்.
டச்சு நிறுவனமான 'டாம்' சமீபத்தில் உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தின. இதில், உலகளவில் ஆறாவது இடத்தில் பெங்களூரு இடம் பிடித்தது.
இது தொடர்பாக, பெங்களூரில் நேற்று நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா அளித்த பேட்டி:
நகரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், நெரிசல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. சாலையில் தங்கள் பணியாற்றிய போலீஸ் ஊழியர்கள், அதிகாரிகளால், இது சாத்தியமானது.
அதிநவீன ட்ரோன், கண்காணிப்பு கேமரா உட்பட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் மெட்ரோ இணைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது.
பஸ் நிறுத்தங்கள் இடமாற்றம், 'யு டர்ன்' மூடல் என பல்வேறு நடவடிக்கைகளால் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. பயண நேரத்தை குறைப்பதில் 'டாப் 10' பட்டியலில், பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

