ADDED : பிப் 03, 2025 05:02 AM

தங்கவயல்; ''தாலுகா அலுவலகத்தில் ஏஜென்ட்டுகளை நம்பி மோசம் போகாதீர்கள். அவர்களின் தவறான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டாம். இதனால் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும்,'' என்று கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி தெரிவித்தார்.
இவர், மினி விதான் சவுதா என்ற தங்கவயல் தாலுகா நிர்வாக அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் திடீரென விசிட் செய்தார். இரண்டு மணி நேரம் பல்வேறு கோப்புகளை பரிசீலித்தார்.
அதன் பின் அவர் அளித்த பேட்டி:
தங்கவயல் தாலுகா அலுவலகத்தில் ஆவணங்களை டிஜிட்டல் மையம் ஆக்கும் பணிகள், துவங்கி உள்ளது. கர்நாடகாவில் தங்கவயலில் 'மாடர்ன் ரிக்கார்ட் ரூம்' அமைப்பதற்கான வசதிகள் உள்ளன. அவைகளை ஆய்வு செய்தேன்.
இங்கு பணியில் ஆறு பேர் மட்டுமே உள்ளனர். இன்னும் நான்கு பேர் பணி அமர்த்தப்படுவர். புதிய கம்ப்யூட்டர்கள், ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்கப்படும்.
தாலுகா அலுவலகத்தில் ஏஜென்ட்டுகளை நம்பி யாரும் மோசம் போகாதீர்கள். அவர்களின் தவறான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டாம். இதனால் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும்.
தங்கவயலில் ஏழைகளின் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காணும். தந்தை எந்த ஜாதியோ, அதன்படி தான் பிள்ளைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படும். இதை பரிசீலித்து வழங்கும் அதிகாரம் தாசில்தாருக்கு உண்டு. பிற ஜாதியினர் எஸ்.சி., சான்றிதழ் பெற்று மோசடி செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. எனவே ஜாதி சான்றிதழ் வழங்கலில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தங்கவயல் தாசில்தார் நாகவேணி உடன் இருந்தார்.