sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாரத் ராஷ்ட்ர சமிதி - பா.ஜ., இணைப்பு?: சந்திரசேகர ராவ் மனதில் இருக்கும் ரகசியம்

/

பாரத் ராஷ்ட்ர சமிதி - பா.ஜ., இணைப்பு?: சந்திரசேகர ராவ் மனதில் இருக்கும் ரகசியம்

பாரத் ராஷ்ட்ர சமிதி - பா.ஜ., இணைப்பு?: சந்திரசேகர ராவ் மனதில் இருக்கும் ரகசியம்

பாரத் ராஷ்ட்ர சமிதி - பா.ஜ., இணைப்பு?: சந்திரசேகர ராவ் மனதில் இருக்கும் ரகசியம்


ADDED : ஜூலை 31, 2025 11:50 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெலுங்கானாவில், பாரத் ராஷ்ட்ர சமிதியை பா.ஜ.,வுடன் இணைக்க அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் விரும்பியதாக பா.ஜ., - எம்.பி., சி.எம்.ரமேஷ் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், 71. தனி மாநிலமாக உருவான பின், தெலுங்கானாவில் நடந்த முதல் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தவரும் அவரே.

உட்கட்சி பூசல்

தொடர்ந்து இரு முறை வென்று ஆட்சியில் இருந்த அவர், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து ரேவந்த் ரெட்டி முதல்வரானார்.

தெலுங்கானாவில் பிரதான எதிர்க்கட்சியாக பாரத் ராஷ்ட்ர சமிதி உள்ள நிலையில், அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ், பா.ஜ.,வை நேரடியாக விமர்சிப்பதில்லை என, அவரது மகளும், எம்.எல்.சி.,யுமான கவிதாவே வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இதனால், கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்தது.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், அக்கட்சியின் லோக்சபா எம்.பி.,யுமான சி.எம்.ரமேஷ், 60, புது குண்டை போட்டுள்ளார். அதாவது, 'பா.ஜ.,வுடன் பாரத் ராஷ்ட்ர சமிதியை இணைக்க சந்திரசேகர ராவ் விரும்பினார்' என, அவர் அளித்த பேட்டி தான், தெலுங்கானா அரசியலில் தற்போது, 'ஹாட் டாப்பிக்'காக உள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தில் இருந்த சி.எம்.ரமேஷ், 2019 தேர்தல் தோல்விக்கு பின், பா.ஜ.,வில் இணைந்தார். கடந்த லோக்சபா தேர்தலில், அனகப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றார். அவரது சகோதரர் சி.எம்.ராஜேஷ், நாடு முழுதும் உட்கட்டமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

தெலுங்கானாவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டியை பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

குற்றச்சாட்டு

தெலுங்கானா அரசால் உருவாக்கப்பட்டு வரும், 'பியூச்சர் சிட்டி' திட்டத்தில், பா.ஜ., - எம்.பி., சி.எம்.ரமேஷின் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனத்துக்கு, 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் குற்றஞ்சாட்டினார்.

மேலும், கச்சிபவுலி பகுதியில், 400 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து, 10,000 கோடி ரூபாய் பெற ரேவந்த் ரெட்டிக்கு சி.எம்.ரமேஷ் உதவியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த பா.ஜ., - எம்.பி., சி.எம்.ரமேஷ், “சந்திரசேகர ராவ் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனம், ஏலத்தில் பங்கேற்று டெண்டரை கைப்பற்றியது,” என்றார்.

சி.எம்.ரமேஷ் மேலும் கூறுகையில், “டில்லியில் என்னை சந்தித்த சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்ட்ர சமிதியை பா.ஜ.,வுடன் இணைக்க விரும்புவதாக தெரிவித்தார். தன் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், அப்போது அவர் வலியுறுத்தினார். இது பொய் என, சந்திரசேகர ராவ் கூறலாம்.

எதிர்பார்ப்பு

'ஆனால் என்னிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. மேலும், அவரது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான விபரங்களும் என்னிடம் உள்ளன. தேவைப்பட்டால், சி.பி.ஐ.,யிடம் அளித்து விசாரணை நடத்த சொல்வேன்,” என்றார்.

இதை வலுப்படுத்தும் வகையில், தெலுங்கானா பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரும், பா.ஜ.,வுடன் பாரத் ராஷ்ட்ர சமிதியை சந்திரசேகர ராவ் இணைக்க விரும்பியதாகக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது. ஏற்கனவே உட்கட்சி மோதலால் பாரத் ராஷ்ட்ர சமிதி திணறி வரும் நிலையில், இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us