பா.ஜ., ஆட்சியில் 10 ஆண்டுகளில் பெரிய மாற்றம்: மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்
பா.ஜ., ஆட்சியில் 10 ஆண்டுகளில் பெரிய மாற்றம்: மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்
ADDED : பிப் 15, 2024 01:30 PM

புதுடில்லி: '' மொபைல் போன்கள் மற்றும் தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது'' என மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறினார்.
இது குறித்து ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது: இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். இதற்கு இளைஞர்கள் பங்களிப்பார்கள். இன்று மொபைல் போன்கள் மற்றும் தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. காங்., ஆட்சியில் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் உற்பத்தி கடந்த ஆண்டில் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தை உயர்த்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பா.ஜ., பல்வேறு முக்கிய திட்டங்களை உருவாக்கி உள்ளது. அசாமில் ரூ.25,000 கோடியில் செமி கண்டக்டர் ஆலை விரைவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

