
மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் பெரும் தவறுகள் அரங்கேறியுள்ளன. பா.ஜ.,வின் நலனைக் காக்க, மாநில அரசுக்கு தெரிவிக்காமல் தேர்தல் கமிஷன் செயல்பட்டது. வரைவு பட்டியலில் தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்
மக்களை சுரண்டும் அரசு!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில் டிக்கெட் விலையை உயர்த்தியதன் மூலம் சாமானிய மக்களை சுரண்டி வருகிறது. திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், போலி விளம்பரங்களால் ரயில்வே துறை நலிவடைந்து வருகிறது.
மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்.,
விசாரணையில் திருப்தியில்லை!
சபரி மலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கில், சிறப்பு விசாரணை குழு இதுவரை உண்மை குற்றவாளிகளை பிடிக்காமல் உள்ளது. இது, அந்தக் குழுவின் தோல்வியை காட்டுகிறது. மாநில உள்துறையின் தலையீடு காரணமாக இந்த வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை.
சன்னி ஜோசப் தலைவர், கேரள காங்.,

