பீஹாரில் வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பரிதாப பலி; 3 பேர் கவலைக்கிடம்
பீஹாரில் வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பரிதாப பலி; 3 பேர் கவலைக்கிடம்
ADDED : ஆக 04, 2025 12:31 PM

பாட்னா: பீஹாரில் மின்சார கம்பியில் மோதிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட, விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பீஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில், 9 பேருடன் சென்று கொண்டிருந்த வேன் மின்சார கம்பியில் மோதியது. பின்னர் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததால், பலர் அதன் அடியில் சிக்கிக் கொண்டனர். காயம் அடைந்த 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இறந்தவர்களின் குடும்பங்கள் துயரம் அடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

