பீஹாரில் கொட்டும் கனமழை; கவர்னர், முதல்வர் இல்லத்தில் புகுந்த வெள்ளம்
பீஹாரில் கொட்டும் கனமழை; கவர்னர், முதல்வர் இல்லத்தில் புகுந்த வெள்ளம்
ADDED : ஜூலை 29, 2025 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா: பீஹாரில் பெய்து வரும் கனமழையால், கவர்னர் மாளிகை, முதல்வர் இல்லத்தில் வெள்ளம் புகுந்தது.
பீஹாரில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. தொடரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது.
நேற்றைய தினம் மழை வலுக்க, தலைநகர் பாட்னா வெள்ளத்தில் சிக்கியது. முதல்வர், கவர்னர் இல்லங்களில் வெள்ள நீர் புகுந்தது.
சாலைகள், குடியிருப்புகள் என எங்கும் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இதனிடையே கனமழை இன்றும் (ஜூலை 29) நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 27 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

