sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹார் வாக்காளர் திருத்த பணியில் ஆதாரை ஏற்க வேண்டும்!; தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

/

பீஹார் வாக்காளர் திருத்த பணியில் ஆதாரை ஏற்க வேண்டும்!; தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பீஹார் வாக்காளர் திருத்த பணியில் ஆதாரை ஏற்க வேண்டும்!; தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பீஹார் வாக்காளர் திருத்த பணியில் ஆதாரை ஏற்க வேண்டும்!; தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

20


ADDED : செப் 09, 2025 03:38 AM

Google News

20

ADDED : செப் 09, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஹாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, ஆதார் அட்டையை அடையாள சான்றாக ஏற்றுக் கொள்ளும்படி, தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம், ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்று அல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த ஜூன் இறுதியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு, காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

போலி வாக்காளர்கள் பீஹார் முழுதும் தேர்தல் கமிஷன் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்தனர். அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஏழு லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்ததும், உயிரிழந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, 65 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டனர்.

ஆக., 1ல் வெளியான திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. தகுதி வாய்ந்த வாக்காளர்கள், வரும் 30 வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டையை அடையாள சான்றாக ஏற்றுக் கொள்ளும்படி, தேர்தல் கமிஷனுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டதாவது:

பீஹாரில் வாக் காளர் பட்டிய ல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, அடையாள சான்றாக, ஆதார் அட்டையை ஏற்றுக் கொள்ளும்படி, தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே மூன்று முறை உத்தரவிட்டு உள்ளது.

ஆனால், இதை தேர்தல் கமிஷன் கடைப்பிடிக்கவில்லை. இது, நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கை. ஆதார் அட்டையை குடியுரிமைக்கான சான்றாக ஏற்க வேண்டும் என, நாங்கள் சொல்லவில்லை. மாறாக, வசிப்பிடத்திற்கான சான்றாக தான் ஏற்க சொல்கிறோம்.

குறிப்பிட்ட இடத்தில் ஒருவர் வசிக்கிறார் என்பதற்கு சான்றாக, ஆதார் அட்டை இருக்கிறது. அது ஏற்கப்படவில்லை எனில், பலரால் ஓட்டளிக்க முடியாது.

வாக்காளர்களிடம் இருந்து ஆதார் அட்டையை ஏற்றுக் கொண்ட உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே, தேர்தல் கமிஷன் ஏற்கனவே கூறியுள்ள 11 ஆவணங்களில், 12வதாக ஆதார் அட்டையை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

அனுமதி


தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிடுகையில், ''ஆதார் அட்டையை குடியுரிமை சான்றாக ஏற்க முடியாது. இந்திய குடியுரிமை பெற்ற ஒருவர் தான், தேர்தல்களில் ஓட்டளிக்க முடியும்.

''ஆதார் அட்டையை குடியுரிமை சான்றாக கருத வேண்டும் என, மனுதாரர்கள் விரும்புகின்றனர்.

''அப்படி செய்தால், அது தவறாக பயன்படுத்தக் கூடும். பீஹாரின் மொத்த வாக்காளர்களில், 99.6 சதவீதம் பேர் பரிந்துரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேருக்கும், ஆதார் அட்டையை பயன் படுத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

''அப்படி இருக்கையில், யாருக்காக ஆதார் அட்டையை சேர்க்கக் கோரி மனுதாரர்கள் கேட்கின்றனர்?'' என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், 'ஆதார் அட்டையை ஏற்றுக் கொள்வோம் என முன்பு சொன்ன தேர்தல் கமிஷன், தற்போது ஏன் மறுக்கிறது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போல ஆதார் அட்டையும் ஆதாரப்பூர்வமான ஆவணம் தானே.

'அதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?


ஒருவரிடம் ஆதார் அட்டை இருந்தால், அதை சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் அவரை சேர்ப்பதில் தேர்தல் கமிஷனுக்கு என்ன பிரச்னை?' என, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:




பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, ஆதார் அட்டையை, 12வது ஆவணமாக தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும். ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும் அதிகாரிகளுக்கு உரிமை இருக்கிறது.

அதே சமயம், ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும் நாங்கள் இந்த உத்தரவில் தெளிவு படுத்துகிறோம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us