sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சீன ஜி.பி.எஸ்., கருவியுடன் கர்நாடக கடற்கரையில் பிடிபட்டது பறவை

/

 சீன ஜி.பி.எஸ்., கருவியுடன் கர்நாடக கடற்கரையில் பிடிபட்டது பறவை

 சீன ஜி.பி.எஸ்., கருவியுடன் கர்நாடக கடற்கரையில் பிடிபட்டது பறவை

 சீன ஜி.பி.எஸ்., கருவியுடன் கர்நாடக கடற்கரையில் பிடிபட்டது பறவை

1


ADDED : டிச 19, 2025 06:00 AM

Google News

1

ADDED : டிச 19, 2025 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்வார்: கர்நாடகாவில், ஐ.என்.எஸ்., கடம்பா கடற்படை தளத்துக்கு அருகே, சீன தயாரிப்பு ஜி.பி.எஸ்., எனப்படும் வழிகாட்டி 'சில்' உடன் தென்பட்ட, 'சீகல்' என்றழைக்கப்படும் கடல் புறாவை, அப்பகுதியினர் கைப்பற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் கடற்கரை பகுதியில், நம் கடற்படையின் முக்கியத்துவம் வாய்ந்த ஐ.என்.எஸ்., கடம்பா தளம் உள்ளது. இதன் அருகே உள்ள திம்மக்கா பகுதியில் தனிநபருக்கு சொந்தமான தோட்டத்தில், உடலில் வித்தியாசமான கருவியுடன் கடல்புறா அமர்ந்திருந்ததை அப்பகுதியினர் நேற்று முன்தினம் கண்டனர்.

சந்தேகமடைந்த அவர்கள் வனத்துறையின் கடல் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள், போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பறவையை பாதுகாப்பாக பிடித்து ஆய்வு செய்தனர்.

கருவியில் சீன அறிவியல் அகாடமியின் சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் குறியீடுகள் இருந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

இது குறித்து போலீசார் கூறுகையில், 'பறவைகளின் இடப்பெயர்வு, உணவுப் பழக்கம் மற்றும் பயண வழித்தடங்களை ஆய்வு செய்வதற்காக, இந்த ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு இருக்கலாம்.

'இந்த பறவை ஆர்க்டிக் பகுதிகளை கடந்து 10,000 கி.மீ.,க்கும் மேல் பயணித்து வந்திருக்கலாம் என, நிபுணர்கள் கருதுகின்றனர். என்ன தரவுகளை கருவி அனுப்பியுள்ளது என்பதை கண்டறியும் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

கர்நாடகாவின் கார்வார் கடற்கரை பகுதி யில், கடந்த ஆண்டு நவம்பரிலும் இதே போன்று ஜி.பி.எஸ்., கருவியுடன் கழுகு ஒன்று பிடிபட்டது. விசாரணையில், அது வன உயிரின ஆய்வுக்காக அனுப்பப்பட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us