பிஸ்லெரி நிறுவனத்திற்கு புதிய சிக்கல்; மேற்குவங்க ஆலையில் சேகரிக்கப்பட்ட மாதிரி ஆய்வில் அதிர்ச்சி
பிஸ்லெரி நிறுவனத்திற்கு புதிய சிக்கல்; மேற்குவங்க ஆலையில் சேகரிக்கப்பட்ட மாதிரி ஆய்வில் அதிர்ச்சி
ADDED : நவ 28, 2026 08:16 AM

- நமது சிறப்பு நிருபர் -
நாடு முழுவதும் பிஸ்லெரி நிறுவனம் பாட்டில் குடிநீர் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. எப்எஸ்எஸ்ஏஐ இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் கோவாவில் உள்ள பிஸ்லெரி நிறுவனத்தின் குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு சென்று தயாரிப்பு மாதிரியை சேகரித்து ஆய்வு செய்தது. அந்த குடிநீர் மாதிரியில் புரோமேட் என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டது.
பிஸ்லெரி குடிநீர் தரமற்றதாக இருப்பதாக கூறி அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர எப்எஸ்எஸ்ஏஐ அனுமதி அளித்துள்ளது. அனைத்து பாட்டில் குடிநீர் நிறுவனங்களின் தயாரிப்புகளையும் ஆய்வு செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மேற்குவங்கம் மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம், டெலிபாரா கிராமத்தில் உள்ள பிஸ்லேரியின் ஆலையிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியில், கோலிபார்ம் பாக்டீரியா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பாட்டில் குடிநீர் பிராண்டான பிஸ்லெரி புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வுகள், கண்காணிப்பு மற்றும் மாதிரி சேகரிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநில உணவு ஆணையர்கள் மற்றும் மண்டல இயக்குநர்களை ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
