தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பஞ்சாப், குஜராத், உ.பி.,க்கு பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

பஞ்சாப், குஜராத், உ.பி.,க்கு பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

பஞ்சாப், குஜராத், உ.பி.,க்கு பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்


UPDATED : ஆக 18, 2026 06:05 PM

ADDED : ஆக 18, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 06:05 PM ADDED : ஆக 18, 2026 05:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -

உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அம்மாநிலங்களுக்கான பா.ஜ., புதிய மேலிட பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி., மற்றும் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், 2027 பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதே போல், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தில், அடுத்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், உ.பி., - பா.ஜ., மேலிட பொறுப்பாளராக, ராஜ்யசபா எம்.பி.,யும், கட்சியின் தேசிய பொதுச்செயலருமான வினோத் தாவ்டேவை நியமித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் உத்தரவிட்டுள்ளார்.

அதே போல், பஞ்சாப் பா.ஜ., மேலிட பொறுப்பாளராக, பா.ஜ., தேசிய பொதுச்செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சதீஷ் பூனியா; குஜராத் பா.ஜ., மேலிட பொறுப்பாளராக, கட்சியின் ராஜ்யசபா எம்.பி., தருண் சுக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது, உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பா.ஜ.,வில், தேசிய அளவில், 76 புதிய நிர்வாகிகள் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே புதிய மேலிட பொறுப்பாளர்களை பா.ஜ., மேலிடம் நியமித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us