நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் இருக்கும் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதுதொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் நிரம்பி வழித்தன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வீடியோவை தன் 'எக்ஸ்' பக்கத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., துர்கேஷ் பதக் வெளியிட்டிருந்தார்.
இதையும் பா.ஜ., விமர்சனம் செய்தது.
டில்லி பா.ஜ., தலைவர் ராஜேஷ் பாட்டியா, தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'சோகத்தில் இருந்து ஆம் ஆத்மி அரசும், எம்.எல்.ஏ., துர்கேஷ் பதக்கும் இன்னும் பாடம் கற்கவில்லை. தண்ணீர் தேங்குவதால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் கடவுள் தடுக்கிறார்' என கூறியுள்ளார்.