லஷ்கர் இ பாகிஸ்தான்: காங்கிரசை கடுமையாக விமர்சித்த பா.ஜ.
லஷ்கர் இ பாகிஸ்தான்: காங்கிரசை கடுமையாக விமர்சித்த பா.ஜ.
ADDED : ஏப் 30, 2025 06:58 AM

புதுடில்லி: நாட்டின் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் காங்கிரசை லஷ்கர் இ பாகிஸ்தான் என பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை காங்கிரஸ், வெளியிட்டது. பிரதமரின் பெயரை குறிப்பிடாமல், அவரை மறைமுகமாகவும் அதில் காங்கிரஸ் விமர்சித்து இருந்தது. காங்கிரசின் இத்தகைய செயலை பா.ஜ., கடுமையாக கண்டித்துள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் செயலாக காங்கிரசின் நடவடிக்கை அமைந்துஇருக்கிறது என்று பா.ஜ., விமர்சித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் முக்கிய தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான கவுரவ் பாட்டியா நிருபர்களிடம் கூறியதாவது:
பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு அவர்கள்(காங்கிரஸ்)  சமிக்ஞை அனுப்புகிறார்கள். சொந்த நாட்டுடன் கைகோர்க்காமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அவர்கள் வெளியிட்ட பதிவு தெரியாமல் பதிவிட்டது அல்ல.
நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்கும் முயற்சியாகவும், பிரதமரை விமர்சித்தும் வெளியிடப்பட்ட பதிவு. இப்படி ஒரு பதிவை வெளியிட்ட காங்கிரசை லஷ்கர் இ பாகிஸ்தான் என்றே அழைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

