பிரசாந்த் கிஷோருக்கு எதிராக இடைத்தேர்தல் வேட்பாளரை மாற்றியது பாஜ!
பிரசாந்த் கிஷோருக்கு எதிராக இடைத்தேர்தல் வேட்பாளரை மாற்றியது பாஜ!
ADDED : ஜூலை 10, 2026 08:54 PM

பாட்னா: பீஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோருக்கு எதிரான வேட்பாளரை பாஜ மாற்றி உள்ளது.
பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பீஹாரின் ராஜ்யசபாவுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டததை தொடர்ந்து பங்கிபூர் சட்டசபை தொகுதி காலியானது. அதற்கான இடைத்தேர்தல் ஜூலை 30ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை ஆக.3ம் தேதி வெளியாகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு ஜூலை 13ம் தேதி இறுதி நாளாகும்.
இந்த தொகுதியில் பிரபல தேர்தல் உத்தி நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் பாஜ வேட்பாளராக அபிஷேக் குமார் சின்ஹா அறிவிக்கப்பட்டு, அவர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
பின்னர், குடும்ப சூழல் காரணமாக தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இந் நிலையில், பாஜ புதிய வேட்பாளராக 32 வயதான நீரஜ்குமார் சின்ஹா தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பாஜவில் ஓட்டுச்சாவடி அலுவலராக, பாஜ யுவ மோர்ச்சா மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி இருக்கிறார்.
வேட்பாளர் மாற்றத்தை அறிந்த ஜன் சுராஜ் கட்சி, பாஜவை விமர்சித்து உள்ளது. பிரசாந்த் கிஷோருக்கு பயந்து பாஜ வேட்பாளரை மாற்றி விட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளது.
