ADDED : ஜூலை 10, 2026 08:50 PM
கழிவுநீர் தேங்கி நிற்கிறது
தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
ராஜகுமாரி, புதுச்சேரி.
போக்குவரத்து இடையூறு
புதுச்சேரி, அண்ணா சலை, அண்ணா திடல் எதிரில் கட்டட வேஸ்ட் பொருட்கள் சாலையில் கிடப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
ரங்கநாதன், புதுச்சேரி.
சாலையில் ஆக்கிரமிப்பு
திலாசுபேட்டை சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தேன்மொழி, திலாசுபேட்டை.
பஸ் வசதி தேவை
தேங்காய்த்திட்டு பகுதிக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செல்வம், நைனார்மண்டபம்.
நகரில் ஆக்கிரமிப்பு
மூலக்குளம் மோதிலால் நகரில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.
சிவா, மூலக்குளம்.
தெரு நாய்கள் தொல்லை
கடலுார் சாலை, இடையார்பாளையம் என்.ஆர்., நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
பூவிழி, என்.ஆர்., நகர்.
