ADDED : ஜூலை 10, 2026 10:11 PM
புதுச்சேரி: கோரிக்கைகளை வலியுறுத்தி, உழவர்கரை நகராசியில், ஊழியர்கள் சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது.
உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கடந்த 7ம் தேதி முதல் உழவர்கரை நகராட்சியில், தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஏழாவது ஊதியக் குழு உயர்த்திய சம்பளம் வழங்க வேண்டும். நகராட்சியில், இளநிலை கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் பதவிகளை நியமனம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதில் நேற்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., காளியப்பன், துரைசெல்வம் தலைமை தாங்கினர். மோதிலால், ஐ.என்.டி.யு.சி., ஞான சேகரன், முத்துராமன், கூட்டு நடவடிக்கை குழு கதிரேசன், பொன்னம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
