செயற்கை நுண்ணறிவு மூலம் போலி செய்திகளை கண்டறிய பயிற்சி
செயற்கை நுண்ணறிவு மூலம் போலி செய்திகளை கண்டறிய பயிற்சி
ADDED : ஜூலை 10, 2026 10:11 PM
புதுச்சேரி: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரதுறை சார்பில், செயற்கை நுண்ணறிவு மூலம் போலி செய்திகளை கண்டறியும் பயிலரங்கம் நேற்று நடந்தது.
ஓட்டல் சன்வே மனோரில் நடந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குனர் சுரேஷ்ராஜ் வரவேற்றார். ஜான்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அரசு செயலர் முகமது அஹ்சன் அபித் வாழ்த்தி பேசினார். மத்திய பத்திரிகை தகவல் அலுவலக தலைமை இயக்குனர் பழனிசாமி நோக்கவுரையாற்றினார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய வீரேந்திர சாம்பியால் சிறப்புரையாற்றினார். முதல்வர் ரங்கசாமி பயிலரங்கில் கலந்த கொண்ட பத்திரிகையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கோழிக்கோடு பல்கலைக் கழக உதவிப் பேராசியர் ஹபீப் ரஹ்மான், செயற்கை நுண்ணறிவு யுகத்தில், ஊடக செய்திகளின் உண்மை சரிபார்ப்பு மற்றும் தகவல் உறுதிப்படுத்தலுக்கான மேம்பட்ட நவீன கருவிகள் தலைப்பில், பயிற்சி அளித்தார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனர் அருண்குமார் நன்றி கூறினார்.
