ADDED : ஜூலை 10, 2026 10:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், உழவர்கரை தொகுதியில் பணிபுரியும் மின்துறை ஊழியர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நாராயணசாமி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, மின் துறை ஊழியர்களுக்கு ஹெல்மெட்டுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் லட்சுமிபதி, ஆயுட்கால உறுப்பினர் அற்புதராஜ், டாக்டர் தேவகாந்த், மின் துறை அலுவலர்கள், ஊழியர்கள், தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
