ADDED : ஜூலை 10, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காமராஜர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உப்பளம் தொகுதி பயனாளிகளுக்கு முதல் தவணை வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசின் குடிசை மாற்றுவாரியம் மூலம், காமராஜர் வீடு கட்டும் திட்டம், ஒருங்கிணைந்த பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் –2.0 கீழ் உப்பளம் தொகுதியில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பயனாளிகளுக்கு முதல் தவணை வழங்கும் நிகழ்ச்சி, சட்டசபையில் நேற்று நடந்தது.
சபாநாயகர் அன்பழகன், பயனாளிகளுக்கு முதல் தவணை தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான ஆணை வழங்கினார்.
செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சுதர்சன், இளநிலை பொறியாளர் உதயகுமார், ஆய்வாளர் சக்திவேல் உடனிருந்தனர்.
