விளம்பர செய்தி பி.எஸ்., செயற்கை கண் சார்ந்த செயல்முறை பயிற்சி
விளம்பர செய்தி பி.எஸ்., செயற்கை கண் சார்ந்த செயல்முறை பயிற்சி
ADDED : ஜூலை 10, 2026 10:42 PM
புதுச்சேரி: விநாயகா மிஷன பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பயைனுாரில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளின் கண் ஒளியியல் பிரிவின் மூலம் செயற்கை கண் சார்ந்த செயல்முறை பயிற்சி சென்னை பையனுார் கல்லுாரியில் நடந்தது.
பல்கலைக்கழக வேந்தர் கணேசன் வழிகாட்டுதலின்படி நடந்த பயிற்சிக்கு, கண் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளர் தமிழ் சுடர் வரவேற்றார். கல்லுாரிகளின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐரிஸ் பர்பெக்ட் முக தாடை மற்றும் செயற்கை கண் மறுவாழ்வு மருத்துவ மையத்தின் நிறுவனர் பிரியா பாலசுப்ரமணியன், சென்னை அரசு கண் ஒளியியல் கல்லுாரி மூத்த விரிவுரையாளர் சதீஷ்குமார் ஆகியோர் செயற்கை கண்தயாரித்தல் மற்றும் அதனை சார்ந்த பல்வேறு நேரடி செயல்முறை பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சயில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவமனைகளை சார்ந்த கண் ஒளியியலாளர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு படவிளக்க காட்சி வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியார்கள் தமிழ்சுடர், பானு ஆகியோர் செய்திருந்தனர். சென்னை கல்லுாரி கண் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளர் பானு நன்றி கூறினார்.
